முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி! – திமுகவினர் அதிர்ச்சி!

வியாழன், 14 ஜூலை 2022 (12:47 IST)
சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. அதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் அரசு நிகழ்ச்சிகள் சில நிறுத்தி வைக்கப்பட்டன.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை காவெரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்