முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை அறிக்கை

வெள்ளி, 15 ஜூலை 2022 (13:33 IST)
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் தேறி வருகிறார் என்றும் முதல்வர் கொரொனாவில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் அனைத்தும் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 
மேலும் அவர் முதல்வர் ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையிலான வகையான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவர் படிப்படியாக தேறி வருகிறார் என்றும் காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்