ஆயிரக்கணக்கான மலர்களால் உருவாக்கப்பட்ட கப்பல், கார்..! மலர் கண்காட்சியை கண்டு ரசித்த முதல்வர்!

Prasanth Karthick
வியாழன், 2 ஜனவரி 2025 (10:53 IST)

சென்னை செம்மொழி பூங்காவில் இன்று தொடங்கும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாடல்களை கண்டு ரசித்தார்.

 

சென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், 4வது மலர் கண்காட்சி இன்று செம்மொழி பூங்காவில் தொடங்கியது. இதற்காக பல ஆயிரக்கணக்கான மலர்களை கொண்டு கார், கப்பல், வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாடல்களை கண்டு ரசித்தார். இன்று முதல் ஜனவரி 18ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்டு களிக்கலாம். இதற்காக பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளே கேமரா எடுத்து செல்ல கூடுதலாக ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்