இந்நிறுவனம் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ ஆகிய விமானங்களில் வைபை இணையதள சேவையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. விமானம் 10,000 அடிக்கு மேல் பறக்கும் போது பயணிகள் வைஃபை மூலம் தங்களுடைய லேப்டாப், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் கூட பயன்படுத்த அனுமதி உண்டு என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், அலுவலக பணிகளுக்காக விமானத்தில் செல்பவர்கள் விமான பயண நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள இந்த இணைய சேவையை எங்கள் பயணங்களுக்கு வழங்குகிறோம் என்றும், இந்த புதிய அனுபவத்தை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் ஏர் இந்தியா நிறுவன வாடிக்கையாளர் அனுபவ பிரிவு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.