அசாம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தினர் பெரும்பாலானோர் ஜவுளித்துறை பணியாளர்கள் என்றும், வங்கதேசத்தில் மோசமான தொழில் காரணமாக தமிழகத்தில் அவர்கள் பணியில் சேருவதற்கு ஊடுருவி வருகின்றனர் என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
ஆனால் அதே நேரத்தில், வங்கதேசத்தில் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்கள் மோசமான சூழ்நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், இதிலிருந்து தேச பக்தி உள்ளவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வங்கதேசத்திலிருந்து அதிக அளவு ஊடுருவி வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசி உள்ளதாகவும், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.