சசிகலா பற்றி பேச மறுத்த செல்லூர் ராஜூ!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:00 IST)
அரசியல் நாகரிகம் கருதி சசிகலாவை பற்றி இங்கு பேச விரும்பவில்லை என செல்லூர் ராஜூ பேட்டி.

 
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மதுசூதனன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். 
 
இதனிடையே அரசியல் நாகரிகம் கருதி சசிகலாவை பற்றி இங்கு பேச விரும்பவில்லை என சசிகலா அதிமுக கொடி பொருந்திய காரில் வந்ததை பற்றிய கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் அளித்தார். எங்களுடைய தலைவரை இழந்துள்ளோம். இந்த சூழ்நிலையில் இதை பற்றி பேச விரும்பவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்