ஆகஸ்டு 14ம் தேதி முப்பெரும் விழா! – கோலகலமாக தயாராகும் சட்டமன்றம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (11:56 IST)
ஆகஸ்டு 14ம் தேதியன்று முப்பெரும் விழா கொண்டாட உள்ள நிலையில் தமிழக சட்டமன்றம் அலங்கரிக்கப்பட உள்ளது.

ஆகஸ்டு 14 நள்ளிரவில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இதனோடே தமிழக சட்டமன்றத்தின் 100வது ஆண்டு விழாவும், தற்போதைய சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற 100வது நாளும் வருகிறது.

இந்த மூன்று முக்கியமான நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்