இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்க வேண்டாம்: சீமான்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:37 IST)
வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்க வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வடமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தால் இந்த நிலத்தின் அரசியலை அவர்கள் நிர்ணயித்துவிடுவார்கள் என்றும் எனவே அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்
 
மேலும் என்எல்சி நிறுவன பணியிடங்களுக்கு தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இதனை வலியுறுத்தி விரைவில் போராட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறினார். 
 
ஏற்கனவே பல மாநில மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப் பட்டுள்ள நிலையில் சீமானின் கருத்து எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்