அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (08:09 IST)
அரையாண்டு தேர்வு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர் 
 
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 24 ஆம் ஆண்டு அரையாண்டுதேர்வு முடிவடைந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அரையாண்டுதேர்வு விடுமுறைகள் அளிக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் விடுமுறை முடிந்து இன்று ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை முதலே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். 
 
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்