வாக்கு சதவீதம் குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம் என்ன? சத்யபிரதா சாகு விளக்கம்

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (14:06 IST)
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று, சதவீத குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முதல்கட்டமாக  செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிடப்பட்டதால் தவறு நடைபெற்றது. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்ததால் சதவீத குளறுபடி ஏற்பட்டது.

தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் தாமதமாகும் என்பதால் செயலி மூலமாக  உடனுக்குடன் அப்டேட் செய்தோம். அதன் பின்னர் தான் சரியான வாக்கு சதவீதம் குறித்த தகவலை தெரிவித்தோம் என்று கூறினார்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், ‘அப்படி பார்த்தால் ஓட்டு சதவீதம் அதிகமாகத் தான் வர வேண்டும், சில பேர் ஓட்டுப்பதிவு விவரம் கொடுக்கவில்லை என்றால் முதலில் குறைந்து இருக்க வேண்டும்,பிறகு அதிகமாக இருக்க வேண்டும், செய்தி முன்னுக்குப் பின் முரணாக உள்ளது..? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்