அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

Siva

திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:07 IST)
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களுடைய இலாகாக்கள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
அதேபோல், சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பொன்முடிக்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்ட நிலையில், அவரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 
இதனை அடுத்து, தமிழக அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
 
செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தேர்வைத் துறை முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல், பொன்முடி வசம் இருந்த வனத்துறை, காதித்துறை அமைச்சராக இருக்கும் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் வர வரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்