இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை: 2 குழந்தைகளுடன் பெண் தவிப்பு..!

Siva

திங்கள், 28 ஏப்ரல் 2025 (07:21 IST)
இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை என்ற நிலை பாகிஸ்தானியரை திருமணம் செய்ததால், இந்திய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ’சனா’ என்ற பெண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் இந்தியா வந்த நிலையில், பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சனா தனது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு வாகா எல்லை வழியாக செல்லும் போது, அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததால், பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சனாவின் இரு குழந்தைகளும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால், அவர்கள் பாகிஸ்தானுக்கு நுழையலாம் என்றும், ஆனால் சனாவை அனுமதிக்க முடியாது என்றும் கூறியதால், இரு குழந்தைகளையும் தனியே பாகிஸ்தானுக்கு அவர் அனுப்ப மறுத்துவிட்டார்.

இது குறித்து அவர் கூறியபோது, ’எனது விசா காலாவதி ஆகிவிட்டதால், இந்தியாவை விட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் வாகா எல்லையில் என்னை பாகிஸ்தான் அதிகாரிகள் நுழைய அனுமதி மறுத்துவிட்டனர். இப்போது என்னால் இந்தியாவுக்கும் செல்ல முடியவில்லை, பாகிஸ்தானுக்கும் செல்ல முடியவில்லை’ என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்