சசிகலா புஷ்பாவிற்கு திருமணம்? - யார் இந்த ராமசாமி?

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (15:12 IST)
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா ராமசாமி என்கிற வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என வெளியான செய்திதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

 
எம்.பி. சசிகலா புஷாவிற்கும், வழக்கறிஞர் ராமசாமி என்பவருக்கும் வருகிற 26ம் தேதி திருமணம் நடைபெறுவதாக ஒரு திருமண அழைப்பிதழ் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், இதுபற்றி சசிகலா புஷ்பா இன்னும் எந்த விளக்கும் அளிக்கவில்லை.
 
சசிகலா புஷ்பா எப்போது பரபரப்பான சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவரும், திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின், ஜெ.வும், சசிகலாவும் தன்னை அடித்துவிட்டதாக பாராளுமன்றத்தில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.  அதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நானும் போட்டியிடுவேன் எனக்கூறி அவரின் கணவரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுப்பினார். ஆனால், அதிமுகவினர் அவரை கடுமையாக தாக்கி வெளியே அனுப்பினர்.


 
அந்நிலையில்தான், அவர் மீண்டும் திருமணம் செய்யப் போகிறார் என செய்தி வெளியானது. இந்நிலையில், அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாய் கூறப்படும் ராமசாமி யார் என்பது தெரியவந்துள்ளது.
 
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்த போது, அந்த வழக்கில் ஆஜரானவர்தான் இந்த ராமசாமி. மேலும் சசிகலாவின் உறுப்பினர் அட்டை பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியவரும் இவரே. இவரைத்தான், தற்போது தினகரனின் ஆதரவாளராக மாறியுள்ள சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஆனால், அந்த அழைப்பிதழ் போலியானது. சசிகலா புஷ்பாவின் பெயரை கெடுக்க வேண்டும் என சிலர் இதை செய்துள்ளனர் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்