பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான், பல ஆண்டுகளாக தனி நாடாக ஆக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது. அந்த மண்ணை சேர்ந்த பலூச் விடுதலைப் படையினர், பாகிஸ்தான் அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அந்த இயக்கம் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பலுசிஸ்தான் இப்போது சுதந்திர நாடு என அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கொடியை கீழே இறக்கி, புதிய பலுசிஸ்தான் கொடியை ஏற்றி, தங்களது விடுதலையை கொண்டாடியுள்ளனர்.
அதோடு, பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ராணுவம், காவல் துறைகள் மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக அந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இனவெறி இல்லாத ஒரு புதிய நிர்வாக அமைப்பு விரைவில் உருவாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் இந்த புதிய சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும், புதிய நாட்டுக்கான பண நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்களை உருவாக்க தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் எனவும், பெண்களுக்கு அரசில் முக்கியமான இடம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் #RepublicOfBalochistan என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்த இயக்கம், பாகிஸ்தானுக்கு எதிரான புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.