தமிழக அரசியலை பார்த்து நாடே சிரிக்குது. வேதனையில் சசிகலா புஷ்பா

செவ்வாய், 6 ஜூன் 2017 (23:08 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவருடைய மறைவிற்கு பின்னர் இரண்டு அணிகளாகி தற்போது மூன்று அணிகளாகிவிட்டது. இந்த நிலையில் எந்த நேரமும் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக அரசியல் நிலையை கண்டு டெல்லியில் மட்டுமின்றி நாடே சிரிக்கிறார்கள் என்றும் எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.



 


இன்று மதுரை விமான நிலையத்தில் எம்.பி. சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவுக்கு தினகரனை தலைமை ஏற்க வருமாறு கூறுவது வேடிக்கையாகவும், காமெடியாகவும் உள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கையை தருகின்றனர். அவர்கள் உண்மை தன்மையை அறிய வேண்டும்.

அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியை தக்க வைத்துக் கொள்ள சசிகலா வெளியில் இருந்த போது சின்னம்மா என்பதும், சிறையில் இருக்கும் போது தூக்கி எறிந்து பேசும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் நிலையை கண்டு டெல்லியில் மட்டுமின்றி நாடே சிரிக்கிறார்கள். மீதி உள்ள 4 வருட ஆட்சியிலும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார்கள் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்