சசிகலா - நடராஜன் - மருத்துவமனையில் உருக்கமான சந்திப்பு

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (13:07 IST)
பரோலில் வெளிவந்துள்ள சசிகலா இன்று காலை தனது கணவர் நடராஜனை மருத்துவமனையில் சந்தித்தார்.


 

 
தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள்  மட்டுமே கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சென்னை வந்ந சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கியுள்ளார். 
 
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் நடராஜனை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் அவர் இன்று காலை மருத்துவமனைக்கு சென்றார்.
 
அங்கு நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். அந்த சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலை 9 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க அனுமதி இருப்பதால், அவர் மாலை வரை அங்கு தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்