அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றிவிடும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். எனவே தனக்காக கூடும் கூட்டத்தை நம்பி தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க தினகரன் ரகசிய திட்டம் ஒன்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை கேட்ட சசிகலா அதிர்ந்துவிட்டாராம். இதனையடுத்து தினகரனை அழைத்து கோபமாக அறிவுறை வழங்கியுள்ளார். தனிக்கட்சி தொடங்கி காணாமல் போனவர்கள் நிறையபேர். பணத்தால் மக்கள் நம்பிக்கையை வாங்க முடியாது என கூறிய சசிகலா தினகரனை விட்டுவைத்தால் வேலைக்கு ஆகாது என கூறி பரோலில் வந்து நானே கட்சியை கையில் எடுக்கிறேன் என வந்துள்ளதாக மன்னார்குடி வட்டாரத்தில் பேசப்படுகிறது.