வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது..! ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க பொன்ராஜ் வலியுறுத்தல்.!!

Senthil Velan
சனி, 17 பிப்ரவரி 2024 (12:32 IST)
வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது என்றும் ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற  முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது என்றும் நமக்கு பேரிடர் காலங்களில் வானிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து சொல்லும் அர்ப்புதமான வாய்ப்பாக இந்த செயற்கைக்கோள் அமையும் என்றும் தெரிவித்தார்.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும் என்றார்.  கடந்த 10 ஆண்டுகளாக நாம் அனுபவித்து வரும் பிரச்சனைகளுக்கு ஒரு எதிர்கால சந்ததியை மீட்டெடுக்கவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஒரு நல்ல முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என நினைப்பதாக பொன்ராஜ் கூறினார். 

நமது பொருளாதாரம் கீழே போய் கொண்டிருக்கிறது என்றும் பெட்ரோல் டீசல் விலை மற்றும் விலைவாசி உயர்வு அதிகமாகி கொண்டே இருக்கிறது என்றும் இந்திய நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது  என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
மேலும் வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது என்றும் ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பொன்ராஜ் தெரிவித்தார்.  பொலாரி மெட்ரிக் ரேடார் என்ற ரேடார் கட்டமைப்பை கிட்டத்தட்ட 80 ரேடார்களையாவது உருவாக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 
இப்போது நிருவியுள்ள ரேடார்கள் 20 சென்டி மீட்டர் மழையை கணிக்க கூடிய அளவில் தான் இருக்கிறது என்றும் வரும் காலங்களில் மழை, வெள்ளம், வெப்பம் உள்ளிட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: ED தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவால்..! மார்ச் 16-ல் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!
 
எனவே பேரிடர் மேலாண்மை என்பது ஒரு முக்கியமாக இருக்கிறது என குறிப்பிட்ட அவர், முன்னெச்சரிக்கையாக பொலாரி மெட்ரிக் ரேடார்களை உருவாக்க வேண்டும் என்று பொன்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்