அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு! தலைமை அர்ச்சகர் தகவல்..!

Mahendran

சனி, 17 பிப்ரவரி 2024 (10:20 IST)
அயோத்தியில் ராமர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் அயோத்தி ராமர் கோவிலில் உள்ள குழந்தை ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

ராம் லல்லா என்ற ஐந்து வயது குழந்தை ராமர், காலை 4 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும் நிலையில் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சத்யேந்திர தாஸ் என்ற தலைமை கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ராமர் கோயில் கதவை மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை மூட உள்ளோம் என்றும் அப்போதுதான் அவரால் ஓய்வு எடுக்க முடியும் என்றும் தினமும் ஒரு மணி நேரம் குழந்தை ராமருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் தொடர்ச்சியாக தரிசனம் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இனி தினமும் ஒரு மணி நேரம் ராமருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்