சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில மாதங்கள் தடைபட்டது. இந்நிலையில் இப்போது படம் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.