ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நந்தி என்ற பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்ற 25 வயது இளைஞர் தமிழ்நாட்டில் கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் தனது சொந்த ஊர் திரும்பிய நிலையில், 24 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்யாமல் லிவிங் உறவில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், ஆத்திரம் அடைந்த கசாப்பு கடைக்காரர் நரேஷ், அந்தப் பெண்ணை தனது வீட்டில் அழைத்துச் சென்று, அங்கு துப்பட்டாவால் கழுத்தை நிறுத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு, கூர்மையான ஆயுதத்தால் 50 துண்டுகளாக வெட்டி, காட்டில் உள்ள விலங்குகளுக்கு உணவாக வீசியுள்ளார்.
ஒரு சில பெண்ணின் உடல் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் விசாரணை செய்ததில், நரேஷ் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தன்னுடன் லிவிங் உறவில் இருந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.