பள்ளி, கல்லூரிகளில் சாதி, இன மோதல்: விசாரணையை தொடக்கிய நீதிபதி சந்துரு..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (15:08 IST)
பள்ளி, கல்லூரிகளில் சாதி, இன மோதல்களை தடுப்பதற்கான ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்த அரசாணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 
இந்த அரசாணையில் 6 மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை கேட்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் சாதி இன மோதல்களால் கைதாகி விடுதலையான சிறுவர்களிடம் உரையாடி, மோதல்களுக்கான காரணங்களை பெற வேண்டும்  என்றும், வருங்காலத்தில் கல்வி நிலையங்களில் இணக்கமான சூழல் நிலவ, தேவையானவற்றை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதி சந்துரு குழு தனது விசாரணையை தொடங்கிய்விட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்