தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன்! – ராம்கோ நிறுவனம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (13:25 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் அளிப்பதாக ராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோஒனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பலரும் அரசுக்கு நிதியளித்து வருவதுடன், தங்களாலான மருத்துவ உதவிகளையும் தொழில் நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஐந்து இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உள்ளதாக ராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் ரூ.5 கோடி செலவில் நிறுவப்படும் இந்த ஐந்து ஆலைகள் மூலமாக ஒரு நாளைக்கு 800 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கை வெளியிட்டுள்ள ராம்கோ நிறுவனம் இந்த ஐந்து ஆலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன்கள் அவசர ஆக்ஸிஜன் தேவை உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 கோடியை கொரோனா நிவாரணத்திற்காக தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு ராம்கோ நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகம் போலவே கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ராம்கோ நிறுவனம் கொரோனா கால உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்