கோலி என்னை ஸ்லெட்ஜ் செய்தது மகிழ்ச்சியே… சூர்யகுமார் யாதவ் கருத்து!

செவ்வாய், 25 மே 2021 (12:14 IST)
இந்திய அணியின் இளம் வீரரான சூர்யகுமார் யாதவ் கோலி தன்னை ஸ்லெட்ஜ் செய்தது குறித்து பேசியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில்  மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் கோலி சிறப்பாக ஆடிக் கொண்டு இருந்த சூர்யகுமாரை நோக்கி சென்று முறைத்துப் பார்த்து ஸ்லெட்ஜிங் செய்தார். இது ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுபோல ஒரு இளம் வீரரிடம் நடந்து கொள்ளலாமா எனக் கோலிக்கு எதிராய் கண்டனங்களை பதிவுகள் எழுந்தன.

அந்த ஆக்ரோஷமான தருணம் குறித்து இப்போது பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் ‘அந்த போட்டியில் எந்த வீரராக இருந்தாலும் கோலி அப்படிதான் நடந்துகொண்டிருப்பார். ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு ஆக்ரோஷமானவர். அவர் என்னை ஸ்லெட்ஜ் செய்தது எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் அப்போது அவர்களுக்கு என் விக்கெட் தேவையாய் இருந்தது. எப்போதும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நானும் அன்று கோபமானேன். ஆனால் போட்டி முடிந்ததும் கோலி நான் சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சகஜம்தான் என்று கூறினார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்