இப்ப இல்லனா எப்பவு இல்ல.. ரஜினி ரசிகர்கள் போராட்டம்! – ட்ரெண்டாகும் அரசியலுக்கு வாங்க ரஜினி!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (10:37 IST)
ரஜினி அரசியலில் நுழைய வேண்டுமென அவரது ரசிகர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அதற்கான பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரியில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இடையே ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “ஆன்மீக அரசியல் அழைப்பு விழா” என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் # அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்