அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
புதன், 2 அக்டோபர் 2024 (11:17 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாற்றத்தால், கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதன்படி, அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பகுதியில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் எட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்