தாயை கொலை செய்து உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட மகன்: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

Mahendran
புதன், 2 அக்டோபர் 2024 (10:48 IST)
பெற்ற தாயை கொலை செய்து, அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, தாயை கொன்று அவரது உடலை சமைத்து சாப்பிட்டதாக மகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

2021 ஆம் ஆண்டு, கோலாலம்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, மகனுக்கு மரண தண்டனை விதித்தது. அதற்குப் பிறகு, குற்றவாளி மேல்முறையீடு செய்தார். சில மாதங்களாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவின் விசாரணை நடந்து வந்த நிலையில், கோலாலம்பூர் நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

"இதைவிட கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான வழக்கை நான் இதுவரை பார்த்ததில்லை," என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்