படிப்படியாக அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு - ராதாகிருஷ்ணன்

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (09:21 IST)
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 2,194 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,79,463 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2,194 பேர்களில் 833 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,670 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. கடந்த ஆண்டு கொரோனா நோய்க்கு எந்த மருந்தும் இல்லாமல் இருந்ததாலும், மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மட்டுமே ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதுள்ள சூழலில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்