இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளார், அதேபோல் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்பியும் மறைந்த தொழிலதிபருமான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்
இவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர் அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்பதும் நாகரீகமான அரசியலில் ஒன்றாக பார்க்கப்படுகிறது