புதுச்சேரி கடற்கரைக்கு அரசு விதித்த கட்டுப்பாடு: பொதுமக்கள் நிம்மதி!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:58 IST)
புதுச்சேரி கடற்கரைக்கு அரசு விதித்த கட்டுப்பாடு: பொதுமக்கள் நிம்மதி!
தமிழகத்தில் சென்னை மெரினா உள்பட எந்த கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் புதுச்சேரியிலும் கடற்கரைக்கு செல்லும் பொது மக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு புதுச்சேரியில் தொடங்குகிறது. இதனை அடுத்து புதுச்சேரி கடற்கரையில் பொதுமக்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாலை 5 மணிக்கு மேல் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகம் போல் மொத்தமாக அனுமதி இல்லை என்று கூறாமல் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி அரசு பொதுமக்களை கடற்கரையில் அனுமதித்து உள்ளதால் அந்த மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்