பொள்ளாச்சியை தொடர்ந்து பூந்தமல்லி: கேடுகெட்ட பெண் வார்டன் செய்த லீலைகள்!!!

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (16:11 IST)
பொள்ளாச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பூந்தமல்லியில் வார்டன் ஒருவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே தற்போது பூந்தமல்லியில் மேலும் ஒரு அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வெளியூர் பெண்கள் தங்கி வேலைக்கும், காலேஜிற்கும் சென்று வருகின்றனர். ஆனந்தி என்ற பெண் இந்த விடுதிக்கு வார்டனாக இருந்துள்ளார்.
 
கேடுகெட்ட ஆனந்தி, அங்கு தங்கியிருக்கும் பெண்களிடம் நைசாக பேசி எனக்கு பல பணக்கார ஆண்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்களை அறிமுகம் செய்கிறேன் என கூறி அவர்களை பப்புகளுக்கும், பார்களுக்கும் அழைத்து சென்று அவர்களை குடிக்கவைத்து பணக்கார ஆண்களுக்கு விருந்தாக்கியுள்ளார். இதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
இதில் கொடுமை என்னெவென்றால் கும்பல் ஒன்று நேராக விடுதிக்கே வந்து பெண்களை தேர்வு செய்துவிட்டு செல்வார்களாம், அவர்களை மூளைச்சலவை செய்து கூட்டிச்செல்வது தான் வார்டன்(புரோக்கர்) ஆனந்தியின் வேலையாம். 
 
வழக்கம்போல் ஆனந்தி தனது இச்சை வேலையை விடுதியில் தங்கியிருந்த மதுரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் காட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் தனக்கு இதில் இஷ்டமில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பிசாசு ஆனந்தி, மதுரை பெண்ணை கொடுமைபடுத்தியுள்ளார்.
 
இதுசம்மந்தமாக அந்த பெண் தன் தாய்க்கு போன் செய்து கூறினார். பதறிபோன அவரது தான் பூந்மல்லிக்கு வந்து புரோக்கர் வேலை செய்த ஆனந்தியை பொளந்துகட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்