வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடல்.. அரசு மரியாதையுடன் அடக்கம்..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (12:44 IST)
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
 
30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதை அளித்தது. சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதிசடங்கு சற்றுமுன் நடைபெற்றது.
 
இந்த இறுதிச்சடங்கின்போது 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது.
 
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமி நாதன் அவர்கள் கடந்த 28ஆம் தேதி சென்னையில் உள்ள  தன் இல்லத்தில் வயது முதிர்வால் காலமானார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்