இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டார். இந்த வழக்கில் வெளியாகியுள்ள பல தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்த முபினின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் முபினும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து சில பொருட்களை காரில் ஏற்றும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதை கொண்டு போலீஸார் அந்த மற்ற நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோவையில் கார் சிலிண்டர் விபத்தில் பலியான உடலை அடக்க செய்ய அனைத்து ஜமாத்துகளும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவதும், முபின் சதி முயற்சி உடந்தையாக செயல்பட்டதாக கருதி, அமைதியை விரும்புவதாலும், சமூக விரோத செயலுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் வேண்டி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.