திமிரு பிடிச்சவன் படத்தைப் பார்த்து போலீஸ்காரர் செய்த வேலை

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (13:25 IST)
செஞ்சியில் ரோட்டில் கிடந்த மண்ணை போலீஸார் இருவர் மண்வெட்டியில் அப்புறப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருந்த திமிரு பிடிச்சவன் படத்தில் போலீஸாக நடித்த விஜய் ஆண்டனி, ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது,  சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருப்பதைக்கண்டு அதனை சுத்தம் செய்வார். அதேபோல் செஞ்சியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
நேற்று திருவண்ணாமலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டதால் நாடெங்கிலிருமிருந்து திருவண்ணாமலையை நோக்கி மக்கள் படையெடுத்தனர். இதனிடையே செஞ்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டுருந்த காவலர்கள், ரோட்டில் மண் கொட்டிக்கிடப்பதை பார்த்தனர்.
 
இதனால் விபத்து ஏற்படும் எனக் கருதி, காவலர் ஒருவர் ஒரு மண்வெட்டியை எடுத்து அதனை அப்புறப்படுத்தினார். போலீஸாரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே, பலர் சமூக வலைதளத்தில் அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்