இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பிரதமர்! – விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (09:25 IST)
நாளை அரசு முறை நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக நாளை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. நாளை திண்டுக்கலில் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

மாணவர்களுக்கு பட்டம் அளிக்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளார். முன்னதாக இளையராஜா மக்களவை கௌரவ எம்.பியாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்