பிரபல தமிழ் நடிகரான விஷால் சமீபத்தில் காசிக்கு தனது நண்பர்களுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் விஷால் “அன்பான பிரதமர் மோடிஜி, நான் காசிக்கு சென்று சிறப்பான தரிசனத்தை பெற்றேன் மற்றும் கங்கையின் புனித நீரையும் தொட்டேன். கோவிலை புதுப்பித்து சிறப்பாக மாற்றியுள்ளதுடன், அனைவரும் வரும் வகையில் அனைத்தையும் எளிதாக்கியுள்ளீர்கள். அதற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டிருந்தார்.
அதற்கு பிரதமர் மோடி “காசியில் நீங்கள் அற்புதமான அனுபவங்களை பெற்றதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். விஷாலின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள நடிகரும் அரசியல் செயல்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் “ஷாட் ஓகே.. அடுத்து?” என்று கிண்டலாக கேட்டுள்ளார். இந்த ட்வீட்களுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.