சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (07:54 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது
 
உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்ததுதான் என்பதும் இதனை எதிர்க்கட்சிகள் கண்டித்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்காததன் காரணமாக இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோலின் விலை 22 காசுகள் உயர்ந்து 88.07 ரூபாயாக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து 80.90 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்