மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வரி உயர்வு? – விலை உயரும் ஸ்மார்ட்போன்கள்!

புதன், 20 ஜனவரி 2021 (17:32 IST)
பிப்ரவரியில் மத்திய ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஸ்மார்ட்போன் உற்பத்திக்கான வரி அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 ல் நடைபெற உள்ளது. பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி வரி அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போது ஸ்மார்ட்போன்களுக்கான வரி 5 சதவீதமாக உள்ள நிலையில் பட்ஜெட் தாக்கலில் அது 10 சதவீதமாக உயர வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் ஸ்மார்ட்போன்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்