6 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்பட்ட மகள்… சவுதியில் கொத்தடிமையக – பெற்றொர் கோரிக்கை !

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:50 IST)
6 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த தங்கள் மகள் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று தஞ்சையைச் சேர்ந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சையைச் சேர்ந்த யாகப்பா மற்றும் பவுலின் மார்த்தாள் தம்பதிகளின் மகள் இமாகுலேட்டா. கடந்த 2012 ஆம் ஆண்டு சவுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் கம்ப்யூட்டர் சம்மந்தமான வேலை என்று சொல்லி அழைத்து செல்லப்பட்ட அவர் அங்கு வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் தனது பெற்றொருக்கு போன் செய்து புலம்பியுள்ளார். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டார். ஒருவருட போராட்டத்துக்குப் பிறகுதான் அவரது உடல் இந்தியா எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சவுதியில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருந்த 23 தமிழ்ப் பெண்கள் பற்றிய வீடியோ செய்தியில் தங்கள் மகள் இருப்பதைப் பார்த்து அவரை மீட்டுத்தர கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அவர்களின் கடிதத்துக்கு எந்த வித பதிலும் இல்லாததால் இப்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்