தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தேவை - ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (12:36 IST)
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல். 

 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,56,697 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 129 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,081 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஆகியவை முடிந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பெயரை மறந்திருந்த நிலையில், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருவித அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. 
 
எனவே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மக்களிடையே எடுத்துரைத்து, இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்