தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,584 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,05,106 ஆக உயர்ந்தது. புதிதாக 24 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,747 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3791 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,44,092 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 36,267 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் 1,947,642,992 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,31,510 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.