பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள்: அதிமுக குறித்து ப சிதம்பரம்..!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (12:21 IST)
பாரதிய ஜனதா கட்சி எழு என்றால் எழுவார்கள், உட்கார் என்றால் உட்காருவார்கள், மண்டியிடு என்றால் மண்டியிடுவார்கள், காலில் விழுந்து விழுந்து கும்பிடு என்றால் கும்பிடுவார்கள் என அதிமுக குறித்து ப சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
 
மத்திய அரசு கொள்கை வேறு என்றால் அதிமுக அங்கு ஏன் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் பாஜகவின் எந்த கொள்கையில் நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு கட்சிகள் அனைத்து கொள்கையிலும் ஒன்றிணை வேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் ஒரு சில கொள்கைகளில் ஒன்றிணை வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
 
அதிமுகவிற்கு சட்டாம் பிள்ளையாக பாரதிய ஜனதா கட்சி தான் இருக்கிறார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சி என்ன சொன்னாலும் அதை அதிமுக மறு பேச்சில்லாமல் அதிமுக கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார். 
 
மேலும் சீனா ரஷ்யா எகிப்து போன்ற நாடுகள் விமர்சனத்தை சகித்துக் கொள்ளாத நாடுகளாக இருந்த நிலையில் தற்போது இந்தியாவும் அதில் இணைந்து உள்ளது என்று பிபிசி நிகழ்வு குறித்து ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்