ஜார்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்!

சனி, 18 பிப்ரவரி 2023 (15:06 IST)
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுனராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவில் அத்தனை பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று ஜார்கண்ட் மா நிலத்தின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன்  பொறுப்பு ஏற்றுக் கொன்டார்.

அம்மா நிலத்தின் 11 வது கவர்னராக சிபி ராதாகிருஷ்னன் பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு, ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த விழாவில் மாநில முதல்வர்  ஹெமந்த் சோரன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எல்.முருகன் ஆகியோரை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசு பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்