தண்ணீர் என நினைத்து ஆசிட்டைக் குடித்த மூதாட்டி உயிரிழப்பு!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:03 IST)
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் பார்வை குறைபாடு காரணமாக தண்ணீர் என நினைத்து ஆசிட்டைக் குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை  அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தன் தாயார் மேனகாவோடு வசித்து வந்துள்ளார். வயது காரணமாக மேனகாவுக்கு பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சக்கரை நோய்க்காக மருந்தை சாப்பிட்ட அவர் தண்ணீர் என நினைத்து அருகில் இருந்த ஆசிட்டை எடுத்துக் குடித்துள்ளார். இதனால் அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படவே அலறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபோதும் பலனிள்ளாமல் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்