இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவ மழை: வானிலை மையம் தகவல்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (16:47 IST)
வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
வடகிழக்கு பருவ மழை கடந்த 20ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட குறைந்து அளவே பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு வங்க கடலில் தற்போது நிலைக்கொண்டுள்ள கியான் புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
 
இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்