வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இனி மழை எப்படி இருக்கும்? - இந்திய வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick

வியாழன், 26 டிசம்பர் 2024 (09:58 IST)

வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் தற்போது அது வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டி, தமிழக - ஆந்திர கடலோர பகுதிகள் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்