800 அடி உயர மலையில் இறங்கி பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (16:33 IST)
தென் கிழக்கு சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் மலைக்குன்றில் அமர்ந்துள்ள ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைகள், ஆபத்தான பயணம் செய்து பள்ளிக்கு செல்கின்றனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


 

 
இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால், 800 அடி உயரம் கொண்ட மலையிலிருந்து, ஒரு ஏணி மூலம் கீழே இறங்கிதான் வரவேண்டும். ஏறக்குறைய 4 கிலோ மீட்டர் தூரம் மலையிலேயே பயணிக்க வேண்டும். அதில் பல ஆபத்தான வளைவுகளை தாண்டி செல்ல வேண்டும்.
 
முக்கியமாக, அந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அந்த ஏணியின் மூலம் கீழிறங்கி செல்கிறார்கள். இதை தினமும் செய்ய முடியாது என்பதால், இதனால் வேறு வழியில்லாமல், மாதம் இரு முறைதான் தங்களின் வீட்டிற்கு செல்கின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்