உலகின் பல பகுதிகளில் சில நாடுகளுக்கிடையே போர் தொடர்ந்து வரும் சூழலில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குண்டுமழை பொழிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானி தாலிபன் என ஆப்கன் எல்லையிலிருந்து செயல்பட்டு வரும் புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்று அடிக்கடி பாகிஸ்தானிற்குள் ஊடுறுவி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக களமிறங்கிய பாகிஸ்தான் தனது விமானப்படைகளை கொண்டு பாகிஸ்தானி தாலிபன் கும்பல் பதுங்கியுள்ளதாக கூறப்படும் ஆப்கன் எல்லையில் உள்ள பக்திதா பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 46 பேர் உயிரிழந்த நிலையில் அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களே என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் தாலிபன் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம் என கடந்த சில ஆண்டுகளாகவே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K