65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 13 கிராமத்தினர்.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (08:31 IST)
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 கிராமங்கள் 65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டு கொண்டாடி வருகின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடவில்லை என்று கூறியுள்ளனர்.

தீபாவளி கொண்டாடுவதற்காக ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் உள்ளவர்கள் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை அடைக்க முடியாமல் திணறியதை அடுத்து கடந்த 1954 ஆம் ஆண்டு ஊர் பெரியவர்கள் ஒன்றாக சேர்ந்து இனிமேல் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் அதை கடந்த 65 ஆண்டுகளாக அந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பொங்கல் திருவிழாவை மட்டும் சிறப்பாக கொண்டாடுவோம் என்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்