டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு..!

வியாழன், 9 நவம்பர் 2023 (11:58 IST)
தமிழக அரசு ஒவ்வொரு துறையிலும் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கான போனஸ் தகவலை அறிவித்துள்ளது. 
 
 டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20 சதவீத போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தொழிற்சங்கங்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகிஉள்ளது 
 
ஏற்கனவே ஆவின் பணியாளர்களுக்கு 20% போனஸ் என  அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபம் கழகத்தில் உள்ள பணியாளர்களுக்கும் 20% போனஸ் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்தது 
 
டாஸ்மாக்,  ஆவின்,  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபம் கழக துறைகளுக்கும் 20% போனஸ் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அந்ததந்த துறை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்